ஜென்டில்மேன் -2
ஜென்டில்மேன் -2

ஜென்டில் மேன் – 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

ஜென்டில்மேன் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து மோஷன் போஸ்டரை படக்குழு இன்று மாலை வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில் மேன் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதையொட்டி சமீபத்தில் ஷங்கர் கேக் வெட்டி கொண்டாடினார்.

முன்னதாக ஜென்டில் இரண்டாம் பாகம் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்திருந்தார். இரண்டாம் பாகத்தை கோகுல் கிருஷ்ணா இயக்குவதாவும், எம்.எம்.கீரவாணி இசையமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதேபோல், சேத்தன் சீனு நாயகனாகவும் நயன்தாரா சக்கரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் நாயகிகளாகவும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஜென்டில் மேன் – 2 படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு இன்று மாலை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com