குணா திரைப்படம்
குணா திரைப்படம்

குணா திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு?

கமல்ஹாசனின் நடிப்பில் சந்தானபாரதியின் இயக்கத்தில் வெளியான குணா திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது. அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கமலின் நடிப்பில் சந்தானபாரதியின் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், குணா. இளையராஜாவின் இசை, கமலின் அசாத்திய நடிப்பு, வித்தியாசமான கதை, திரைக்கதை என அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட இப்படம் விமர்சனரீதியாக வரவேற்பைப் பெற்ற அளவுக்கு வசூல் செய்யவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம், குணா படம் பற்றிய பேச்சை உருவாக்கியது. அதற்குக் காரணம், குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ பாடல் மஞ்ஞுமல் பாஸ் படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய ஹிட்டானது. இதனால், குணா படம் இப்போது மறுவெளியீடு செய்யப்பட்டால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், குணா படம் ஜூன் 21 ஆம் தேதி மறுவெளியீடு செய்ய இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. சமீபத்தில், இந்தியன் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இப்போது குணா திரைப்படம் வெளியாக இருப்பது கமல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கிளப்பியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com