ஹேப்பி பர்த் டே த்ரிஷா… 'கருப்பு’ படக்குழுவின் குசும்பு!

ஹேப்பி பர்த் டே த்ரிஷா…  'கருப்பு’ படக்குழுவின் குசும்பு!
Published on

இன்றைய தேர்தல் முடிவை வைத்து மட்டும் சொல்லவில்லை, பொதுவாகவே குசும்பர்கள் அதிகம் நிறைந்த நாடு நம் தமிழ்நாடு.

தனது பிறந்தநாளை முன்னிட்டும் நண்பர், அன்பர் விஜய்யின் தேர்தல் வெற்றிக்காகவும் திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு, அங்கிருந்து நேராக விஜய் வீட்டுக்கு த்ரிஷா விசிட் அடித்த செய்தி வைரலான நிலையில்,… பிடித்த நண்பிக்கு பிறந்தநாள் பரிசா ஸ்வீட் கொடுத்திருப்ப…பொக்கே கொடுத்திருப்ப,… அவ்வளவு ஏன் கோடி ரூபா மதிப்புல வைர நெக்லஸ் கூட கொடுத்திருப்ப… ஆனா தமிழ்நாட்டையே பரிசா கொடுக்கத் தயாரா இருக்க தலைவனைப் பாத்தியா ? என்று தொடங்கி பல்லாயிரக்கணக்கான பதிவுகள்.

இன்னும் சிலரோ பெரம்பூர் தொகுதியை விஜய் ராஜினாமா செய்துவிட்டு, அங்கு த்ரிஷா நிறுத்தப்பட்டு, வெல்லப்பட்டு, உடனடியாக துணை முதல்வர் ஆக்கப்பட்டு என்று பல பொட்டுகள் வைக்கிறார்கள்.

ஆனால் சக கலைஞர்கள் இவ்வளவு வெளிப்படையாக இறங்கி அடிக்க முடியாதல்லவா?

விஜய்யின் வெற்றிக்காக திரையுலகத்தினர் அடுத்தடுத்து வாழ்த்துகளை வாரியிறைத்துக்கொண்டிருக்க, த்ரிஷா கடைசியாக நடித்து முடித்திருக்கும் ‘கருப்பு’ படக்குழுவினர், அவரது பிறந்தநாள் வாழ்த்து என்கிற பெயரில் விஜய்க்கும் மறைமுகமாக வாழ்த்துச் சொல்லி தங்கள் குசும்பைக் காட்டியிருக்கிறார்கள்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்துள்ள இப்படம் அடுத்த வாரம் ரிலீஸாவதாய் இருக்கிறது.

இப்போது ‘ஜனநாயகன்’ ரிலீஸ் சிக்கல் ஜஸ்ட் லைக் தேட் முடிந்துவிடும் என்பதால் த்ரிஷாவின் கருப்பு முதலில் வருமா, ஜனநாயகன் முதலில் வருமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com