மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்புதளம்
மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்புதளம்

வணக்கம் பகத் சார்…! ரத்தினவேலு கதாபாத்திரம் குறித்து மனம் திறந்த மாரிசெல்வராஜ்!

நடிகர் பகத் பாசில் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு இயக்குநர் மாரிசெல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமா மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவையும் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் பகத் பாசில். சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் ரத்தினவேலு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக பெரிதும் பாராட்டப்பட்ட அந்த கதாபாத்திரத்தின் காட்சிகளை ஒட்டி வெட்டி சிலர் சாதி பெருமை பேசினர். மாமன்னன் பேசிய சமூகநீதிஅரசியலேயே அது சிதைத்துவிட்டதாகப் பலரும் வருத்தப்பட்டனர்.

இந்தநிலையில், பகத் பாசிலின் பிறந்தநாளையொட்டி இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் பகத் சார்… உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துத்தான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன். மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல், பகத் பாசிலுக்கு அவருடைய காதல் மனைவியான நஸ்ரியாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com