ஜெயிலர் வசூல் எவ்வளவு?; வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!

ஜெயிலர் வசூல் எவ்வளவு?; வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் இதுவரை ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.

இந்த படம், முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

இன்றுடன் படம் வெளியாகி பதினைந்து நாட்கள் ஆகும் நிலையில், 14 நாட்களில் ஜெயிலர் திரைப்படம் ரூ. 525 கோடியை கடந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதன்மூலம், 2.0 படத்துக்கு பிறகு ரூ. 500 கோடி வசூலைக் கடந்த ரஜினியின் படமாக ஜெயிலர் சாதனை படைத்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com