இளையராஜா
இளையராஜா

“எனக்கு பிறந்தநாள் இல்லை!” – வருத்தத்தில் இளையராஜா

"என் மகளைப் பறிகொடுத்ததால் எனக்கு இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை” என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் 81ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் உட்பட உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், நடிகர் தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையாக உருவாகும் ’இளையராஜா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த இளையராஜா, “என் பிறந்தநாளுக்கு நீங்கள்தான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறீர்கள். ஆனால், என் மகளைப் பறிகொடுத்ததால் எனக்கு இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. இது உங்களுக்கத்தான். நன்றி” எனக் கூறினார்.

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com