கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து

‘ஆசை ஆசையாய் அறிமுகம் செய்கிறேன்’…கவிஞர் வைரமுத்து வெளியிட்ட வீடியோ!

கவிஞர் வைரமுத்து தனது புதிய கவிதை நூலுக்கு ‘மகா கவிதை’ என்ற பெயர் வைத்துள்ள நிலையில், இந்த புத்தகம் தொடர்பான அறிமுக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து சினிமா பாடல்களைத் தாண்டி கவிதை, நாவல், தன்வரலாறு, கட்டுரை என இதுவரை 37 புத்தகங்கள் எழுதியுள்ளார். தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன், சாகித்திய அகாதெமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில்தான் கவிஞர் வைரமுத்து ‘மகா கவிதை’ என்ற பெயரில் புதிதாக புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளார். இது தொடர்பாக அறிமுக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,

உலகத் தமிழ் உறவுகளே!

வணக்கம்

இளைய தலைமுறையின்

அறிவை விரிவு செய்யவும்

அகிலம் காக்கவும்

ஆகாயம் அளக்கவும்

அண்டம் கடக்கவும்

என் உயிரை

ஊற்றி ஊற்றிச் செய்த படைப்பு

ஆசை ஆசையாய்

அறிமுகம் செய்கிறேன், என்று கூறி உள்ளார்.

தனது புதிய புத்தகமான 'மகா கவிதை' புத்தகத்திற்கான அறிமுக வீடியோவையும் இதில் வைரமுத்து இணைத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com