இந்தியன் - 2
இந்தியன் - 2

வெளியானது இந்தியன் -2 பாடல்! –எப்படி உள்ளது அனிருத் இசை?

இந்தியன் – 2 படத்தின் ‘பாரா’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். பல ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இந்தப் படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகிறது.

அதேபோல், அடுத்த வருட பொங்கலுக்கு இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இன்று இந்த படத்தின் முதல் பாடலான "பாரா" வெளியாகி கவனம் பெற்றுள்ளது. நேற்று இந்த பாடலில் புரோமோ பாடல் வெளியாகி யூடியூப்பில் டாப் இட ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ள நிலையில், இன்று இந்த முழு பாடலும் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இசையமைத்துள்ள அனிருத், இந்தப் பாடலை மன்னர் கால பாடல் போன்றே இசையமைத்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com