இந்தியன் - 2
இந்தியன் - 2

இந்தியன் -2 படத்தின் முதல் பாடல் புரோமோ வெளியானது!

இந்தியன் - 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பாரா’ பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் - 2 அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனால், படம் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருப்பதால் இந்தியன் - 2 மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தயாரிப்பு நிறுவனமான லைக்கா நேற்று படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டிருந்த நிலையில், இன்று இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

அனிருத் இசையில் பா. விஜய் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை அனிருத், ஸ்ருதிகா சமுத்ராலா இருவரும் சேர்ந்து இந்த பாடியுள்ளனர். இப்பாடலின், முழு வடிவம் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என லைக்கா தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com