நடிகர் பிரேம்ஜி
நடிகர் பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜிக்கு ஜூன் 9 இல் திருமணம்?

Published on

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக திருமண அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியும் இயக்குநர் பாடலாசிரியர் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி அமரனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக வலம்வரும் பிரேம்ஜி வெங்கட் பிரபு படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில், 45 வயதாகும் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் வருகிற ஜூன் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் இந்தத் திருமணம் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமண அழைப்பிதம்
திருமண அழைப்பிதம்

மணமகள் பெயர் இந்து. மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. சினிமா தொடர்பில்லாத நபராக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பிரேம்ஜிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com