ஜெயிலர் திரைப்படம்
ஜெயிலர் திரைப்படம்

வசூல் வேட்டையில் ஜெயிலர்; நேற்றைய வசூல் எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம், நேற்று ஒரு நாளில் மட்டும் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், தமன்னா என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்த படம் ஜெயிலர். வழக்கத்திற்கு மாறான ரஜினியின் நடிப்பும், அவரின் தோற்றம் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இத்திரைப்படம், உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் திரையிடப்பட்டது. முதல் நாளில் மட்டும் ரூ.95.78 கோடி வசூல் செய்தது ஜெயிலர்.

படம் வெளியாகி இன்றுடன் எட்டு நாள் ஆகும் நிலையில், நேற்று ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம், இந்தியா முழுவதும் ரூ.236.65 கோடியும் உலகளவில் ரூ.411.7 கோடியும் வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலை செய்த பட்டியலில் ஜெயிலர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com