ஜோஜு ஜார்ஜூ
ஜோஜு ஜார்ஜூ

தக் லைஃப் ஸ்பாட்: ஹெலிகாப்டரிலிருந்து குதித்த பிரபலத்துக்கு எலும்பு முறிவு!

தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்து விபத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜூக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜூ, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

ஏ.ஆர். ரகுமான் இசையில், ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில், அன்பறிவு சண்டைக்காட்சியில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய அறுபது சதவீதத்துக்கு மேல் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த நிலையில், கமல்ஹாசன், நாசர், ஜோஜூ ஜார்ஜ் ஆகிய மூவரும் பங்கேற்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது, ஜோஜூ ஜார்ஜ் ஹெலிகாப்டரிலிருந்து ஜம்ப் செய்யும்போது, நிலை தடுமாறி கீழே குதித்துள்ளார். இதனால், அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக ஜோஜூ ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் தன் சொந்த ஊரான கொச்சிக்கு சென்றுள்ளார்.

இதனால், தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com