‘உதவுங்க அப்பா...’ மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்... முதல்வருக்கு ஜாய் கிரிசல்டா கோரிக்கை!

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசல்டா
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசல்டா
Published on

தன்னை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாய் கிரிசல்டா கோரிக்கை வைத்துள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசல்டா விவகாரம் கடந்த இரண்டு வாரங்களாகவே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம் பட்டி தங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி, திருமணம் செய்து கொண்ட பின்னர் ஏமாற்றிவிட்டதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா.

இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில், முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து தனக்கும் தனது குழந்தைக்கும் நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “சென்னை நகர ஆணையரிடம் நான் புகார் அளித்து 10 நாட்கள் ஆகிறது, அதில் பிரபல சமையல்காரரும் நடிகருமான மாதம் பட்டி தங்கராஜ் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டார். இப்போது நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நான் என் பார்வையற்ற தாயுடன் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன். இப்போது எனது புகாரின் நிலை எனக்குத் தெரியவில்லை.

ஜாய் கிரிசல்டா பதிவு
ஜாய் கிரிசல்டா பதிவு

இதற்கிடையில், மாதம் பட்டி தங்கராஜுக்கு முக்கிய நபர் போலப் பல விழாக்களில் மரியாதை கொடுக்கப்பட்டு வருகிறது. அவரை அப்பாவி போல அவர் காட்டிக் கொண்டு வருகிறார். மேலும் அவர் எனக்கு எதிராக அநாகரீகமான, ஆபாசமான மற்றும் உள்நோக்கத்துடன் சமூக ஊடக பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுகிறார். அப்பா, உங்கள் அரசாங்கத்தை என்னைப் போன்ற துரதிர்ஷ்டவசமான பெண்கள் நம்புகிறார்கள். இந்த பிரச்சினையில் தலையிட்டு நீதி வழங்குமாறு நான் உங்களிடம் கைகூப்பி மன்றாடுகிறேன்.

எந்தவொரு முக்கிய நபரும் ஒரு பிரபலமும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்துவிட்டு, அதற்கான தண்டனையை அனுபவிக்காமல் சுற்றித் திரிய முடியுமா? எனது பிறக்காத குழந்தைக்கும் எனக்கும் நீதி வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com