சினிமா தவிர்த்த ரஜினியின் பல நடவடிக்கைகள் , ‘என்ன சிவாஜி செத்துட்டாரா ?’ என்பதுபோலத்தான் இருக்கும். தற்போது விஜய் முதல்வராகி பத்துநாட்கள் ஆன நிலையில் அது தொடர்பான விளக்கங்களுக்கு ஞாயிறன்று பத்திரிகையாளர்களை தன் பி.ஆர்.ஓ. மூலம் வரவழைத்து, சந்தித்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கிறார் ரஜினி. ஆனால் ஆசுவாசத்துக்குப் பதில் ஆவேசம் அதிகம் வெளிப்பட்டது தனி ஸ்டோரி.
விஜய் முதல்வரான பிறகு சும்மா ஒரு ஃபார்மாலிடிக்காக வேண்டாவெறுப்பாக ஒரு வாழ்த்துப் பதிவு போட்டதைத் தாண்டி ரஜினி மூச் விடவில்லை. தான் ஏதோ வேறு ஒரு கிரகத்தில் வாழ்வதுபோலவே நடந்துகொண்டார். தனது மனப்புழுக்கத்தில் இருந்து சாந்தமடைய, ஒரு ஆன்மிக விழாவில் கலந்துகொண்டு, அங்கு யாருமே தன்னை ஒரு சூப்பர் ஸ்டார் போல் பார்க்கவில்லை என்று தன்னடக்கம் செய்துகொண்டார். இவ்விழாவுக்கு பெங்களூரு சென்றபோதுவிஜய் குறித்து அவருக்கு முன்னால் நீட்டப்பட்ட மைக்குகளுக்கு அவர் எந்த மரியாதையும் கொடுக்கவில்லை.
மாறாக, நேற்று அவரே கூட்டிய பிரஸ் மீட்டில் ரஜினிகாந்த் - முந்தாநேத்து பேங்ளூர் போகும்போது ஏர்போர்ட்டில் வைத்து கேள்வி கேட்பீர்கள் பதில் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் மீடியால இருந்து ஒருத்தரும் இல்லை. சரி திரும்பி வரும்போதாவது கேள்வி கேட்பீர்கள் பதில் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அப்பவும் ஒருத்தரும் இல்லை’ என்று முழுக்கோழியை பிரியாணிக்குள் மறைக்கிறார்.
அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதிமுக, திமுக கூட்டணி ஆட்சி அமைய தான் முயலவில்லை என்று தன் இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள அவர் பட்ட பாடு இருக்கிறதே…அந்த நடிப்பை அவர் எந்தப் படத்திலும் இவ்வளவு நுட்பமாக செய்தது இல்லை. இனி இருக்கக்கூடிய படங்களில் இந்த நடிப்பை முயற்சிக்கலாம்.
போகட்டும். ரஜினிக்கு முன்னால் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சினை கமல் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விஜய்யை சந்தித்ததுதான். அதனை கூச்சமே இல்லாமல் வெளிப்படுத்த, சம்பந்தமே இல்லாமல் போறபோக்கில் கமலை தாழ்த்திவிட்டுப் போனார். ஒன்று தேவையே இல்லாமல் முதலமைச்சரை தான் சந்திக்கமாட்டேன் என்றது. இரண்டு ஒருவேளை கமல் முதலமைச்சர் ஆகியிருந்தால் பொறாமை வந்திருக்குமோ என்னமோ என்றுவிட்டு, ’கிடைப்பது கிடைக்காமல் இருக்காது’ என்று ஒரு பத்துப்பைசா பெறாத பஞ்ச் அடித்தார். கடமையாக ‘நண்பர் கமல்’ என்பதை குறிப்பிட மட்டும் மறக்கவே இல்லை.
கமல் மீது ரஜினி இப்படி ஆதங்க மோடில் இருப்பதால் ரொம்பவும் ஆடிப்போயிருப்பவர் ரெட்ஜெயண்ட் முதலாளி உதயநிதிதான். கமல், ரஜினி காம்போவில் இவரது நிறுவனம் தயாரிக்கவிருக்கும் திரைப்படம் தொடங்குமா, முடங்குமா என்று ஏற்கனவே பல முனைகளில் பட்டிமன்றங்கள் தொடங்கியிருக்க, இப்போது ரஜினி கமலை தரம் தாழ்த்தி பேசியிருப்பது, அதாவது அவர் விஜய்யை சந்தித்தது தேவையற்ற செயல். நானெல்லாம் கமலைப்போல் விஜயை தேடிப்போய் சந்திக்க மாட்டேன்’ என்று சொல்லியிருப்பது நிச்சயம் கமல் மனதைப் புண்படுத்தவே செய்யும். இது இருவரும் சேர்ந்து நடிக்கவிருக்கும் படத்தைக் கொஞ்சம் சோர்ந்துபோகவே செய்யும் என்கிற பதட்டத்துக்கு ஆளாகியிருக்கிறார் உதயநிதி.
ஆனால், ‘ 2001 ல் அரசியலுக்கு வந்திருந்தால் 100% ஜெயித்திருப்பேன். முதல்வராகியிருப்பேன்’ என்று அதே பிரஸ்மீட்டில் அடித்த காமெடிபோல், கமல் விஜய்யை சந்தித்ததையும் ரஜினி ஒரு காமெடியாக எடுத்துக்கொண்டால் இருவரும் இணைந்து படம் நடிப்பதில் எவ்வித பிரச்சினைகளும் இருக்கபோவதில்லை.
ஓம் சாந்தி.