Actor Surya
நடிகர் சூர்யா

கங்குவா ஒரு கைக்குழந்தை!- சூர்யா

Published on

கங்குவா படத்துக்காக மழை, வெயில்னு பார்க்காமல் உழைச்ச உழைப்பு வீண் போகாதுனு நம்புறேன் என மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியுள்ளார்.

96' பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் 'மெய்யழகன்'. இப்படத்தில் கார்த்தியுடன், அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் கோவையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

இந்த நிகழ்வில் பேசிய கார்த்தி," 'சலங்கை ஒலி', 'வருஷம் பதினாறு' போன்ற படமெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரியான படங்கள் இப்போ வராதானு தோணியிருக்கு. உறவுகள் நமக்கு ரொம்ப அவசியம். அதைச் சொல்ற படமாக 'மெய்யழகன்' இருக்கும். ரொம்ப உருக்கமான அழகான கதை இது. ஒரே வாரத்துல இந்தக் கதையை பிரேம் குமார் எழுதியிருக்கார். பிரேம் மாதிரியான நண்பரை எங்களுக்குக் கொடுத்ததுக்கு விஜய் சேதுபதிக்குத்தான் நன்றி சொல்லணும். அவர் இல்லைனா இவர் வெளிய வந்திருக்கமாட்டார். அவர்தான் இவரை வெளிய புடிச்சு தள்ளிவிட்டாரு.

என்னுடைய கல்யாணத்துக்குப் பிறகு எனக்கு கோவையில் நடக்கிற விழா இதுதான்னு நினைக்கிறேன். எனக்கும் இந்த ஊருக்கும் எந்த மாதிரியான சொந்தம் இருக்கோ அந்த மாதிரியான ஒரு விஷயத்தைப் பேசுகிற படமா `மெய்யழகன்’ இருக்கும். என்னுடைய வேர்கள் இங்கதான் இருக்கு. அதனால இந்த விழாவை இங்க நடத்தினா நல்லாருக்கும்னு தோணுச்சு!" எனக் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com