30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா முதல் பாகம்!

காந்தாரா சாப்டர் 1
காந்தாரா சாப்டர் 1
Published on

காந்தாரா சாப்டர் 1 படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த காந்தாரா படத்தின் முதல் பாகம், வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதியில் வெளியாகவுள்ளது. சுமார் 30 நாடுகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, கரீபியன், ஃபிஜி, மொரீசியஸ் உள்பட நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய அண்டை நாடுகளிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

காந்தாராவின் முந்தைய பாகம் மற்றும் கேஜிஎஃப் 2, சலார் ஆகிய படங்களைத் தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனமே காந்தாரா சாப்டர் 1-ஐயும் தயாரிக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com