சினிமா
சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் தன் காதலியான மோனிகா என்பவரை வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்ட கவினும் லாஸ்லியாவும் நெருக்கமாக பழகி வந்தனர். விருந்தினராக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த லாஸ்லியாவின் அப்பா அவரைக் கண்டித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. மேலும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் பேசுவதை தவிர்த்துவந்தனர். அதன்பின், அவர்கள் பிரிந்துவிட்டதை லாஸ்லியா உறுதிசெய்தது குறிப்பிடத்தக்கது.