லாப்பட்டா லேடீஸ் என்ற இந்தி திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அடுத்தாண்டு வழங்கப்படுகின்றன. இதற்காக, பல நாடுகளிலிருந்து திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவிலிருந்து அமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய,லாப்பட்டா லேடீஸ் திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு வெளியான அமீர் கானின் லகான் திரைப்படத்திற்குப் பின் இப்பிரிவில் போட்டியிடும் இந்திய படம் இதுதான்.
இறுதிப்பட்டியலில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மகாராஜா, ஜமா, தங்கலான், வாழை, கொட்டுக்காளி ஆகிய 6 தமிழ் திரைப்படங்கள் உட்பட இந்தியா சார்பில் 29 திரைப்படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், நடுவர்கள் குழு லாப்பட்டா லேடீஸ் படத்தைத் தேர்தெடுத்துள்ளனர்.