லாபடா லேடீஸ் திரைப்படம்
லாபடா லேடீஸ் திரைப்படம்

உச்சநீதிமன்றத்தில் லாபடா லேடீஸ் திரையிடல்!

Published on

அமீர்கான் தயாரிப்பில் வெளியான 'லாபடா லேடீஸ்' திரைப்படம் இன்று உச்சநீதிமன்றத்தில் திரையிடப்படுகிறது.

நடிகர் அமீர்கான் தயாரிப்பில் இயக்குநர் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி இந்தியில் வெளியான திரைப்படம் 'லாபடா லேடீஸ்'. இந்த படத்தில் நிதான்ஷி கோயல், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரதிபா ரந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாலின சமத்துவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் 'லாபடா லேடீஸ்' திரைப்படம் உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு திரையிடப்படுகிறது. இந்த திரையிடலின்போது, நடிகர் அமீர்கான் மற்றும் இயக்குநர் கிரண் ராவ் ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் 75ஆவது ஆண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த படத்தின் திரையிடலுக்கும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, உச்சநீதிமன்றத்தின் நிர்வாக கட்டிட வளாகத்தின் சி பிளாக்கில் உள்ள அரங்கில் 'லாபடா லேடீஸ்' திரைப்படம் இன்று மாலை 4.15 மணி முதல் 6.20 மணி வரை திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரையிடலில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள உள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com