லியோ திரைப்படம்
லியோ திரைப்படம்

லியோ: அதிகாலை காட்சிக்கு அனுமதி!

லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக்டோபர் 5ஆம் தேதி வெளியானது. டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல், டிரைலரில் விஜய் பேசிய ஆபாச வார்த்தையும் சர்ச்சையானது. அதனால், யூ டியூபில் வெளியான டிரெய்லரில் குறிப்பிட்ட அந்த வார்த்தையை மியூட் செய்துள்ளனர்.

மேலும், தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், லியோ படத்தினை அதிகாலைக் காட்சிகளில் வெளியிட வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.

இந்நிலையில், அக்டோபர் 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கும் காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 20 முதல் 24 ஆம் தேதி வரை காலை 7 மணிக் காட்சிக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஒருநாளுக்கு 5 காட்சிகள் வரை திரையிடும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com