விஜய் - அர்ஜூன்
விஜய் - அர்ஜூன்

லியோ படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் அர்ஜுன் பிறந்தநாளான இன்று லியோ தயாரிப்பு நிறுவனம் புதிய கிளிம்ஸ் விடியோவை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் அர்ஜுன் பிறந்தநாளான இன்று லியோ தயாரிப்பு நிறுவனம் புதிய கிளிம்ஸ் விடியோவை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதற்காக, ‘ஹரோல்ட் தாஸ்’ என்கிற அர்ஜுன் கதாபாத்திர பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, லியோ படக்குழு சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஆண்டனி தாஸ்’ என்கிற அவர் கதாபாத்திரத்திர கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com