லியோ டிரெய்லர்
லியோ டிரெய்லர்

7 நிமிடங்களில் 14 லட்சம் பேர்… வாவ், லியோ டிரெய்லர்!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிரெய்லர் வெளியான 7 நிமிடங்களில் 14 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்பட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ஸ் வீடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகவுள்ளதால் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து, லியோ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. வெளியான 7 நிமிடங்களுக்குள் 14 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.

இரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் விஜயின் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com