ஃபைட் கிளப்
ஃபைட் கிளப்

நண்பேன்..டா... லோகேஷ் கனகராஜுக்கு இப்படியொரு ஆசையா...?

”உறியடி விஜய்குமார் பெயரும் என் பெயரும் ஒன்றாக வர வேண்டும் என்று 2017இலிருந்து பேசிக்கொண்டு இருக்கிறோம்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடாக ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் வெளிவர இருக்கிறது.

இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கியுள்ள 'ஃபைட் கிளப்' படத்தில் விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணன் வேல் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சென்னையில் நேற்று நடைபெற்ற இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது:

”இந்தப் படம் மாநகரம் மாதிரிதான், எனக்கு இது ஒரு புதிய தொடக்கம். உங்கள் ஆசியோடு தொடங்க ஆசை. உறியடி விஜய் குமார், அவன் பெயரும் என் பெயரும் ஒரு படத்தில் ஒன்றாக வர வேண்டும் என்று 2017இல் இருந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். அது இப்போது நடப்பது மகிழ்ச்சி. எப்போதும் சினிமா பற்றி மட்டுமே சிந்திப்பவன். இந்தப் படத்தை நான் வெளியிடுவது படக்குழுவிற்குச் செய்யும் நல்லதல்ல; நான் என் கம்பெனிக்கு செய்து கொண்ட நல்ல விஷயம் அவ்வளவுதான்.

இந்தப் படத்தில் அத்தனை பேரும் அவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார்கள். நான் படம் எடுக்க ஆசைப்பட்டபோது என் நண்பர்கள்தான் பணம் போட்டு குறும்படம் எடுக்க வைத்தார்கள். அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது செய்வேன் என எவரும் நினைக்கவில்லை. அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனம். ஜி ஸ்குவாட் நிறுவனத்துடைய பார்ட்னர்ஸ் ஜெகதீஷ், சுதன் இருவருக்கும் நன்றி. நல்ல படங்களைத் தர இந்த நிறுவனத்தைத் தொடங்குகிறோம். ” என்று லோகேஷ் கனகராஜ் பேசினார்.

நேற்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com