இளைஞர்களை கவரும் லவ்வர் டிரைலர்!

இளைஞர்களை கவரும் லவ்வர் டிரைலர்!

ஜெய்பீம் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள லவ்வர் திரைப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகிறது. இன்று வெளியான அந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜெய்பீம், குட் நைட் திரைப்படத்தின் மூலம் மனம் கவர்ந்த நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் மணிகண்டன். அவர் தற்போது அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள லவ்வர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன.

இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக ஊடகத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்போதையை இளைஞர்களின் காதலை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. காதலர் தினத்தையொட்டி படம் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com