சினிமா
சென்னை கே.கே.நகரில் உள்ள தனது அலுவலகத்தில் தினமும் ஐம்பது பேருக்கு சாப்பாடு போடப்போவதாக நடிகர் புகழ் கூறியுள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று மலர் தூவி மரியாதை செலுத்திய நடிகர் புகழ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “நான் சென்னைக்கு வந்த புதுதில் பக்கோடா ஒரு வாட்டர் பாக்கெட்டுதான் என்னுடைய சாப்பாடு. விஜயகாந்த் பசியோடு வந்தவர்களுக்குச் சாப்பாடு போட்டிகிறார். இன்றிலிருந்து தினமும் கே.கே.நகரில் உள்ள என்னுடைய அலுவலகத்தில் ஐம்பது பேருக்கு சாப்பாடுப் போடப்போகிறேன். பசியுடைய இருக்கிறவர்கள் என்னுடைய அலுவலகத்துக்கு வாங்க. என்னுடைய வாழ்நாள் முழுவதும் இந்த பணியைச் செய்யப் போகிறேன்.” என்றார்