மாரிமுத்து - கி.ராஜநாராயணன்
மாரிமுத்து - கி.ராஜநாராயணன்

கி.ரா.-விடம் விடாப்பிடியாக கேட்ட ‘வாசகர்’ மாரிமுத்து! -சுகா இரங்கல் #RIPMarimuthu

மாரடைப்பால் உயிரிழந்த மாரிமுத்து வாசிப்பின் மீது எந்தளவிற்கு ஈடுபாடு கொண்டவர் என்பதற்கு கவிஞர் சுகா பதிவொன்றை எழுதியுள்ளார்.

அவை பின்வருமாறு…

”நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாரிமுத்துவைப் போன்ற தீவிர வாசகர்கள் தமிழ் சினிமாவில் அரிது. அவரது மறைவு பல நினைவுகளைக் கிளறி விடுகிறது. உணர்ச்சிமயமான வாசகர் மாரிமுத்து என்பதற்கு சிறந்த உதாரணமாக ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறேன். கி. ராஜநாராயணனின் எழுத்துகள் மீது அதீத மதிப்பு கொண்ட மாரிமுத்து ஒருநாள் கிளம்பி புதுவைக்குச் சென்றிருக்கிறார். கி.ராவிடம் தன்னை ஒரு வாசகர் என்று சொல்லி அறிமுகமாகியிருக்கிறார்.

கி.ராவின் ஒவ்வொரு படைப்பாக எடுத்து ரசித்துச் சொல்லி கி.ராவை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். அடுத்து கி.ராவிடம் தனது ஆசை ஒன்றை மாரிமுத்து சொல்ல, அதிர்ச்சியில் கி.ரா மறுக்க, விடாப்பிடியாக அதைக் கேட்டு வாங்கி செய்திருக்கிறார், மாரிமுத்து.

கி.ராவிடம் மாரிமுத்து கேட்டது இதுதான்.

‘ஐயா! ஒங்க எழுத்து மூலம் எனக்கு எவ்வளவோ குடுத்திருக்கீங்க. உங்க வேட்டியை நான் துவைச்சுப் போடணும்’.

சொன்னபடியே இதை செய்து விட்டுதான் சென்னை திரும்பியிருக்கிறார், ‘வாசகர்’ மாரிமுத்து.” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com