மார்க் ஆண்டனி
மார்க் ஆண்டனி

மார்க் ஆண்டனி ஓ.டி.டி. தேதி அறிவிப்பு!

மார்க் ஆண்டனி திரைப்படம் அக்டோபர் 13ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன், ரித்து வர்மா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம், மார்க் ஆண்டனி. இதை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, வினோத்குமார் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மார்க் ஆண்டனி, இதுவரை உலக அளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வரும் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com