அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - லியோ விஜய்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - லியோ விஜய்Office

லியோ படக் குழுவுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

லியோ படக்குழுவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் லியோ படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கு திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லியோ படத்தை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் நடிகர் விஜய்யை தளபதி விஜய் அண்ணா என்று பதிவிட்டுள்ளார், லோகேஷ் கனகராஜின் பட உருவாக்கம் அருமையாக உள்ளது, அனிருத்தின் இசை நன்றாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் படக்குழுவிற்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com