திரைவிமர்சனத்துக்கு தடைவிதிக்க முடியாது! - உயர்நீதிமன்றம்

Chennai High Court
சென்னை உயர்நீதிமன்றம்
Published on

திரைப்படங்கள் வெளியான மூன்று நாள்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கங்குவா திரைப்படத்திற்குக் கிடைத்த மிக மோசமான விமர்சனங்களால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய படங்கள் வெளியான முதல் மூன்று நாள்களுக்கு விமர்சனங்களைத் தடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது.

இதுகுறித்து விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சவுந்தர், விமர்சனங்கள் கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி விமர்சனத்தை முறைப்படுத்த விதிகள் வகுக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள், யூடியூப் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

மேலும், அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடைவிதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததற்கு சமூக ஊடகங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com