ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய்

‘என் படம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது’ – வழக்குத் தொடர்ந்த ஐஸ்வர்யா ராய்!

Published on

நடிகை ஐஸ்வர்யா ராய், தனது பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதைத் தடுக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் மனுவில் சில இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தனது பெயரையும் புகைப்படங்களையும் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச காணொளிகளிலும் விளம்பரங்களிலும் தவறாகப் பயன்படுத்துகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதனைத் தடுக்கும் விதமாக உடனடி இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீஜஸ் காரியா, குற்றம் சாட்டப்பட்ட 151 இணைய இணைப்புகளை (URLs) அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சாண்டீப் சேத்தி மற்றும் குழுவினர் ஆஜராகினர். இந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 15, 2026 அன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும், அமிதாப்பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷ்ராப் போன்ற பிரபலங்களும் தங்களது “புகழ் உரிமைகள்” பாதுகாப்புக்காக இதே போன்ற வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com