பி.சி. ஸ்ரீராம்
பி.சி. ஸ்ரீராம்

ஜெய்பீம்: இந்தியாவின் குரல் நடுக்கத்தை தருகிறதா? - பி.சி. ஸ்ரீராம் கேள்வி!

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்கு விருது கொடுத்ததை விமர்சித்துள்ள ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ‘ஜெய்பீம் படத்திற்கு விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

2021ஆம் ஆண்டிற்கான 69 தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. விருது அறிவிப்பு குறித்து பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தேசிய விருது அறிவிப்பு குறித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார். சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான விருது தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டதற்கு, ”இந்த நூற்றாண்டின் மிக மோசமான தேர்வு காஷ்மீர் ஃபைல்ஸ்” என்று விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

“இந்த வருடத்தில் வழங்கப்பட்டுள்ள தேசிய விருதுகள் திரைத் துறையினராக மகிழ்ச்சியைத் தந்துள்ளன. ஆனால், ஜெய்பீம் படத்திற்கு விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? அல்லது இந்தியாவின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தை தருகிறதா?” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், இயக்குநர் சுசீந்திரன், “ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளார். நடிகர் நானியும், ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காததற்கு இதயம் நொறுங்கும் எமோஜை பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com