ஆர்ஆர்ஆர் - கடைசி விவசாயி
ஆர்ஆர்ஆர் - கடைசி விவசாயி

தேசிய விருதுகளை அள்ளிய ஆர்ஆர்ஆர்; கடைசி விவசாயி திரைப்படத்திற்கு 2 விருது!

மத்திய அரசால், திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

டெல்லியில் இன்று 2021ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்தார்.

விருது பட்டியல் விவரம் பின்வருமாறு:

சிறந்த நடிகர் - அல்லு அர்ஜூன் (புஷ்பா)

சிறந்த நடிகை - ஆலியா பட் (கங்குபாய் கத்யாவாடி)

சிறந்த படம் - ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட்

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - ஆர்.ஆர்.ஆர்

சிறந்த துணை நடிகர் - பங்கஜ் திரிபாதி - Mimi -இந்தி)

சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோஷி -( தி காஷ்மீர் பைல்ஸ்)

தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது - தி காஷ்மீர் பைல்ஸ்

சிறந்த குழந்தைகள் திரைப்படம் - காந்தி&கோ (குஜராத்தி)

சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது - மேப்பாடியான்

நல்லாண்டி- கடைசி விவசாயி (தமிழ்)

இந்திரன்ஸ் - 'Home' (மலையாளம்)

சிறந்த தமிழ் திரைப்படம் - கடைசி விவசாயி

சிறந்த குஜராத்தித் திரைப்படம் - Last Film Show (சல்லோ ஷோ)

சிறந்த கன்னட திரைப்படம் - 777 சார்லி

சிறந்த மலையாள திரைப்படம் - Home

சிறந்த இந்தி திரைப்படம் - சர்தார் உதம்

சிறந்த பாடல் இசைக்கான விருது - தேவிஶ்ரீ பிரசாத் ( 'புஷ்பா' )

சிறந்த பின்னணி இசை - கீரவாணி (ஆர்.ஆர்.ஆர்)

சிறந்த பின்னணி இசை பாடகி - ஸ்ரேயா கோஷல் (இரவின் நிழல்- மாயவா சாயவா)

சிறந்த ஒளிப்பதிவு - அவிக் முகோபாத்யாய் (சர்தார் உதம்)

சிறந்த படத்தொகுப்பு - சஞ்சய் லீலா பன்சாலி (கங்குபாய் கத்யாவாடி)

சிறந்த கல்வித் திரைப்படம் - 'சிற்பங்களின் சிற்பங்கள்' (இயக்குநர் லெனின்

சிறந்த இசையமைப்பாளர் - 'கருவறை' - குறும்படம்

logo
Andhimazhai
www.andhimazhai.com