17 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் பிரபாஸ் - நயன்தாரா!

Actor Nayanthara
நடிகை நயன்தாரா
Published on

பிரபாஸ் நடிக்கும் த ராஜா சாப் படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் இருவரும் 17 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்க உள்ளனர்.

நயன்தாரா நடிப்பில், டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடன்ட்ஸ், டாக்ஸிக், ராக்காயி ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில் பிரபாஸ் நடிக்கும் ‘த ராஜா சாப்’ படத்தில் அவர் ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹாரர் காமெடி படமான இதை மாருதி இயக்குகிறார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதில் நயன்தாரா பங்குபெறும் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபாஸும் நயன்தாராவும் ஏற்கெனவே ‘யோகி’ (2007) என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

சமீபகாலமாக முன்னணி கதாநாயகிகள் குத்துப்பாடலுக்கு ஆடி வருகிறார்கள். புஷ்பாவில் சமந்தாவும் ஜெயிலரில் தமன்னாவும் புஷ்பா – 2வில் ஸ்ரீலாலாவும் குத்தாட்டம் ஆடினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com