ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

‘புதிய தேதி; அதே மேஜிக்' - ஏ.ஆர். ரஹ்மானின் புதிய அறிவிப்பு!

ஏ.ஆர்.ரஹ்மானின் ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியின் மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த நிலையில், புதிய தேதி, கூடுதல் முழு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட்-12இல் மழையால் ஒத்திவைக்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com