விடாமுயற்சி ஆரவ்
விடாமுயற்சி ஆரவ்

விடாமுயற்சி: மாஸ்ஸான போஸ்டர் வெளியீடு!

Published on

அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார் துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் விடாமுயற்சி வெளியாகிறது.

சமீபத்தில் அஜர்பைஜானில் நடந்துவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து, இப்படத்தின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அர்ஜுனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஆரவ்வின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com