போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும் நிவேதா பெத்துராஜ்
போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும் நிவேதா பெத்துராஜ்

போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நிவேதா பெத்துராஜ்! – வைரலாகும் வீடியோ!

வாகன சோதனையின் போது நடிகை நிவேதா பெத்துராஜ் போலீசாருடன் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி உள்ளது.

‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தற்போது அவர், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடிகை நிவேதா பெத்துராஜின் காரை மடக்கிய போலீசார் சோதனை செய்துள்ளனர். நிவேதா பெத்துராஜிடம் காரின் டிக்கியை திறக்க சொல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், நிவேதா பெத்துராஜ் காரின் டிக்கியை திறக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.

போலீசாருடன் நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், இந்த வீடியோ விரைவில் வெளிவரும் அவரது தெலுங்கு படத்திற்கான புரோமோஷனுக்காகவா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com