ஜப்பான் திரைப்படம்
ஜப்பான் திரைப்படம்

லியோவுக்கு நோ: ஜப்பான் படத்துக்கு ஓகே! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ஜப்பான். இது கார்த்தியின் 25ஆவது படம் என்பதால், படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

முன்னதாக விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, அதன்பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாமல் போனது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த நிலையில், ஜப்பான் படத்தின் இசை வெளியீடு திட்டமிட்டபடி நடைபெற இருப்பது கார்த்தி ரசிகர்கள் இடையில் மிகுந்த கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com