7 ஆஸ்கர் விருதுகளை தட்டித்தூக்கிய ஓப்பன்ஹெய்மர்!

7 ஆஸ்கர் விருதுகளை தட்டித்தூக்கிய ஓப்பன்ஹெய்மர்!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் ஏழு ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

96 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ‘பார்பி’ படம் 8 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் வென்றுள்ளது.

மேலும் இப்படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதையும் வென்று அசத்தியுள்ளார். அவர் 8 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ஓப்பன்ஹெய்மர் படத்துக்ககாக முதல்முறையாக இவ்விருதை வென்றிருக்கிறார்.

சிறந்த நடிகர் விருதுக்கு ஐந்து பேர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ஒப்பன்ஹெய்மர் படத்தில் நடித்த சிலியன் மர்ஃபி, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

இவை தவிர, ஓப்பன்ஹெய்மர் படம் சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை அள்ளி குவித்துள்ளது.

விருது பட்டியல்

சிறந்த படம்: ஒப்பன்ஹெய்மர்

சிறந்த நடிகர்: சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)

சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)

சிறந்த உறுதுணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)

சிறந்த உறுதுணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)

சிறந்த இயக்குநர்: கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: தி பாய் அண்ட் தி ஹெரான்

சிறந்த தழுவல் திரைக்கதை: அமெரிக்கன் ஃபிக்‌ஷன்

சிறந்த அசல் திரைக்கதை: அனாடமி ஆஃப் எ ஃபால்

சிறந்த ஒளிப்பதிவு: ஒப்பன்ஹெய்மர்

சிறந்த ஆடை வடிவமைப்பு: நெப்போலியன்

சிறந்த ஆவணப்படம்: 20 டேஸ் இன் மரியுபோல்

சிறந்த ஆவணக் குறும்படம்: தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்

சிறந்த எடிட்டிங்: ஒபன்ஹெய்மர்

சிறந்த சர்வதேச திரைப்படம்: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்

சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம்: புவர் திங்ஸ்

சிறந்த ஒரிஜினல் இசை: இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி

சிறந்த ஒரிஜினல் பாடல்: வாட் வாஸ் ஐ மேட் ஃபார்? (பார்பி)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: புவர் திங்ஸ்

சிறந்த அனிமேஷன் குறும்படம்: வார் இஸ் ஓவர்

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்: தி ஒண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்

சிறந்த ஒலி: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: காட்ஜில்லா மைனஸ் ஒன்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com