‘டு கில் எ டைகா்’ ஆவணப்படம்
‘டு கில் எ டைகா்’ ஆவணப்படம்

ஆஸ்கர் விருது: சிறந்த ஆவணப்பட பிரிவில் ‘டு கில் ஏ டைகர்’!

ஆஸ்கா் விருதின் சிறந்த ஆவணப் பட பிரிவுக்கான பரிந்துரை பட்டியலில், ‘டு கில் எ டைகா்’ ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது.

96ஆவது ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் 10-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி, இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சிறந்த ஆவணப்பட பிரிவுக்கு ‘டு கில் எ டைகா்’ இடம்பெற்றுள்ளது.

டெல்லியில் பிறந்து, தற்போது கனடாவில் வசித்து வரும் நிஷா பஹுஜா இயக்கிய ‘டு கில் எ டைகா்’ ஆவணப்படம், ஜார்காண்ட் மாநிலத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான மகளுக்காக நீதிப் பெற்றுத்தர போராடும் தந்தையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணப்படமாகும்.

இந்த ஆவணப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு டொரன்டோ சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com