ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய லாபட்டா லேடீஸ்!

லாபடா லேடீஸ் திரைப்படம்
லாபடா லேடீஸ் திரைப்படம்
Published on

ஆஸ்கர் விருதுக்கான இறுதி போட்டியில் இருந்து இந்தி திரைப்படமான லாபட்டா லேடீஸ் வெளியேறி உள்ளது.

சினிமா உலகில் தலைசிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆண்டு நடைபெறும் 97ஆவது ஆஸ்கா் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் லாபட்டா லேடீஸ் திரைப்படம் தோ்வு செய்யப்பட்டிருந்தது.

மொத்தம் 85 படங்கள் ஆஸ்கார் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டன. அதில் இறுதி பட்டியலுக்காக 15 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த இறுதி பட்டியலில் துரதிர்ஷ்டவசமாக லாபட்டா லேடீஸ் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படப் பிரிவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் பட்டியலிலிருந்து வெளியேறியது.

இருப்பினும், சந்தோஷ் என்ற மற்றொரு இந்தி மொழி திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படம் பிரிவில் இடம் பெற்றது. சந்தியா சூரி இயக்கிய இந்த திரைப்படம் கடந்த மே 2024 இல் 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com