
நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி டிரைலர் ஜன நாயகன் டிரைலர் பார்வைகளைக் கடந்துள்ளது.
நடிகர் விஜய் - இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவான ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் சில நாள்களுக்கு முன் வெளியாகி யூடியூபில் 3.9 கோடி (39 மில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வெளியான சிவகார்த்திகேயனின் பராசக்தி டிரைலருக்கு வரவேற்பு இருந்தாலும் இதுவரை எந்த தமிழ் சினிமாவும் செய்யாத சாதனையாக 4.2 கோடி (42 மில்லியன்) பார்வைகளைப் பெற்று ஜன நாயகனைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படத்திற்குக் கூட கிடைக்காத டிரைலர் வரவேற்பு சிவகார்த்திகேயன் படத்திற்கு எப்படி கிடைத்தது என்றும் திட்டமிட்டு புரமோஷன் செய்யப்பட்டதாலேயே இவ்வளவு பார்வைகள் கிடைத்துள்ளதாகவும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். .
மேலும், பராசக்தி டிரைலர் பக்கத்தில் இதனைக் கிண்டலடித்து விஜய் ரசிகர்கள் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.