பாயல் கபாடியாவுடன் படத்தில் நடித்த நடிகர்கள்
பாயல் கபாடியாவுடன் படத்தில் நடித்த நடிகர்கள்

கான் திரைப்பட விழா: பாயல் கபாடியா இயக்கிய படத்துக்கு கிராண்ட் பிரிக்ஸ் விருது!

பாயல் கபாடியா இயக்கியுள்ள ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்துக்கு கான் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கான் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் கடந்த மே 15ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடந்தது. இதில் எழுத்தாளரும் இயக்குநருமான பாயல் கபாடியாவின் முதல் முழுநீள திரைப்படமான ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்' போட்டியிட்டது.

இப்படத்துக்கு கான் விழாவில் தங்கப்பனை விருதுக்கு அடுத்த உயரிய விருதாக கருதப்படும் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தின் திரையிடலுக்குப் பிறகு பார்வையாளர்கள் எழுந்து நின்று 8 நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com