பிரபுதேவா மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ஜாலியா ஜிம்கானா படத்தில் இடம்பெற்றுள்ள ‘போலீஸ்காரனை கட்டிக்கிட்டா’ என்ற பாடல் சர்ச்சையை கிளம்பியுள்ளது.
பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜாலியோ ஜிம்கானா. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா’என்ற பாடல் நேற்று மாலை வெளியானது.
‘போலீஸ்காரனை கட்டிக்கிட்டால் லத்தி வச்சி அடிப்பான், டாக்டரை நா கட்டிக்கிட்டா ஊசி வச்சி குத்துவான்’. இப்படி பல்வேறு தொழில் செய்பவர்களை ஒருமையில் கூறும் வகையில் பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளதோடு, இரட்டை அர்த்தம் தரும் வகையிலும் உள்ளதாக பலரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். ‘ஆஹா! எப்படிப்பட்ட வரிகள்’ என சிலர் கிண்டலடித்தாலும், இந்த தலைமுறையினர் இப்படியான பாடல்களைத்தான் ரசித்துக் கேட்பதாக சிலர் வக்காளுத்தும் வாங்குகின்றனர்.
சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த பாடலை படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரம் எழுதியுள்ளார். பாடலை நடிகை ஆன்ட்ரியா பாடியுள்ளார். அஷ்விண் விநாயக மூர்த்தி என்பவர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.