பூனம் பாண்டே
பூனம் பாண்டே

இன்ப அதிர்ச்சி கொடுத்த பூனம் பாண்டே!

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கருப்பைப் புற்றுநோயால் உயிரிழந்ததாக நேற்று செய்திகள் வெளியான நிலையில், ”தான் உயிருடன் இருப்பதாகவும், கருப்பைப் புற்றுநோய் குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்ததாகவும்” இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல மாடல் அழகியான பூனம் பாண்டே, 'நஷா' எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தவர், சமூக ஊடகங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையிலும் சிக்குவார்.

இவர் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதுபோல தொடர் சர்ச்சைகளைக் கிளப்பி வந்த பூனம் பாண்டே தனது 32 வயதில் கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது அவரது குடும்பத்தினர் நேற்று சமூக ஊடகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டிருந்தனர். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே தான் உயிருடன் இருப்பதாக சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

“நான் உயிருடன்தான் இருக்கிறேன். கருப்பைப் புற்றுநோயால் இறந்து போகவில்லை. கருப்பைப் புற்றுநோயை எப்படி எதிர்கொள்வது என்ற விழிப்புணர்வு இல்லாமல் ஆயிரக்கணக்கான பெண்கள் இறந்துள்ளனர். அது மற்ற புற்றுநோய் போல் அல்ல; அதை தடுக்கலாம். எச்.பி.வி. தடுப்பூசி மூலமாகவும் ஆரம்பத்திலேயே கண்டறிதல், விழிப்புணர்வுடன் இருத்ததல் மூலமாக கருப்பைப் புற்றுநோயை தடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com