பூனம் பாண்டே
பூனம் பாண்டே

நடிகை பூனம் பாண்டே காலமானார்- புற்றுநோயால் அவதி!

புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தன் 32ஆவது வயதில் இன்று காலமானார்.

அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பாண்டே மரணம் குறித்த அறிக்கையை அவரது குடும்ப உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்.

அதில், "இன்று காலை எங்களுக்கு கடினமான நேரமாக அமைந்துவிட்டது. எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டேவை கருப்பைப் புற்றுநோயால் இழந்துவிட்டோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதிவின் உண்மை நிலை குறித்து ரசிகர்கள் சந்தேகம் எழுப்பிய நிலையில், ஊடகத்தினரிடம் பேசிய பூனம் பாண்டே மேலாளர், ”புற்றுநோய் இருந்தது உண்மைதான். உத்தரப் பிரதேசத்தில் உள்ள பூனம் பாண்டேவின் சொந்த ஊரில் அவரின் இறுதிச்சடங்குகள் நடக்கும்.” என்று தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com