விமர்சனத்திலும் வசூலிலும் கவனம் பெற்ற போர் தொழில்!

விமர்சனத்திலும் வசூலிலும் கவனம் பெற்ற போர் தொழில்!
Published on: 

அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள போர் தொழில் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் 5.5 கோடி வசூல் செய்துள்ளது.

நல்ல கதைக்கு வரவேற்பும் வசூலும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்தவகையில், அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் போர் தொழில். நல்ல சஸ்பென்ஸ் திரில்லரான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், படத்தின் வசூல் எப்படி உள்ளது என்று பார்ப்போம், கடந்த ஜூன் 9 ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ஒரு கோடியைத் தாண்டவில்லை. பின்னர் படத்திற்கு கிடைத்த நல்ல விமர்சனத்தை தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் சுமார் 5 கோடி ரூபாய் வசூல் செய்த போர் தொழில், மூன்று நாட்களில் மொத்தம் 5.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனால் படக்குழுவினர் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

அதேபோல், போர் தொழிலுக்குப் போட்டியாக சித்தார்த் நடிப்பில் வெளியான திரைப்படம் டக்கர். இத்திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் 4.51 கோடி வசூல் செய்ததாகவும், மூன்றாவது நாளில் 2 கோடி வசூல் செய்ததாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.