நடிகர் பிரேம்ஜி - இந்து திருமணம்
நடிகர் பிரேம்ஜி - இந்து திருமணம்

திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜி திருமணம்!

திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் பிரேம்ஜி - இந்து திருமணம் இன்று காலை நடைபெற்றது.

நடிகர் பிரேம்ஜி – இந்து திருமண அழைப்பிதழ் சில நாள்களுக்கு முன்னர் சமூக ஊடகத்தில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து, பிரேம்ஜியின் அண்ணனும் திரைப்பட இயக்குநருமான வெங்கட் பிரபு, திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதோடு, மணமகள் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும், எங்களின் பிரைவசியை மதித்து இருந்த இடத்திலிருந்தே மணமக்களவை வாழ்த்தும் படியும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், புகழ்பெற்ற திருத்தணி முகன் கோயில் பிரேம்ஜி – இந்து திருமணம் இன்று காலை நடந்தது. தன்னுடைய தந்தை கங்கை அமரன், அண்ணன் திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் திரைப்பட நடிகர்கள் சிவா, சந்தான பாரதி, ஜெய், கார்த்திக் ராஜா உட்பட திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணம் நடைபெற்று மணமக்கள் முருகனை தரிசித்து வழிபட்டனர். திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற பிரேம்ஜி திருமணத்தில் பங்கேற்ற திரைப்பட நட்சத்திரங்களைக் காண சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com