ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ்
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ்

ரஜினிகாந்த் 171: கதை குறித்து மனம் திறந்த லோகேஷ்!

ரஜினிகாந்த 171 படம் குறித்து சுவாரசிய தகவலை கூறியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த்தின் 171வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இயக்குநர் லோகேஷ் தற்போது விஜய்யின் லியோ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது லோகேஷ் தலைவர் 171 படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் லியோ புரமோஷன் ஒன்றில் லோகேஷிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, “மாநகரம் படத்துக்கு முன்பு எழுதிய கதை. இதில் எனது நண்பர் ஒருவர் நடிக்க இருந்தது. அந்தக் கதையில்தான் தற்போது ரஜினி சார் நடிக்கிறார். மார்ச் அல்லது ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த தற்போது ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com