ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்த்… வாழ்த்து சொல்லக் குவிந்த ரசிகர்கள்!

“மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்ச நட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்” என நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லம் முன்பு, பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால், ரஜினிகாந்த் இல்லத்திற்கு 20 அடி முன்பே தடுப்புகள் அமைத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்னர்.

அதேபோல், ரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்ச நட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்துக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

அண்ணாமலை

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான ரஜினிகாந்த், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் மீது வைத்திருக்கும் மட்டற்ற அன்பும் நிலைத்திருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

அன்புமணி

தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73-ஆவது பிறந்தநாள். அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!

ட்விட்டரில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com