சுபாஷ்கரன் - ரஜினி
சுபாஷ்கரன் - ரஜினி

தலைவர் 170: முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினி!

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 170’ படத்தின் பூஜை இன்று சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. படம் 14 நாட்களில் ரூ. 525 கோடி வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நேற்று தெரிவித்திருந்தது. ஆனால், உலக அளவில் ரூ.700 கோடி வசூலித்திருக்கலாம் என்கின்றனர்.

கேரள விநியோகஸ்தவர் ஒருவர், ஜெயிலர் படத்தை ரூ. 14 கோடிக்கு வாங்கி ரூ. 45 கோடி சம்பாதித்திருக்கிறார். இந்த வாரம் தமிழ்நாட்டைப் போன்றே கேரளாவிலும் ஜெயிலர் வசூல் ஏறுமுகத்தில் உள்ளது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்கான பூஜை இன்று சென்னையில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ஜெய்பீம் ஞானவேல் இயக்குகிறார். ரஜினியின் இந்த 170வது படத்திற்கு ‘வேட்டை’ என பெயரிடப்பட்டுள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. ரஜினி, இஸ்லாமிய காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில் ஆகியோர் நடிக்க உள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்கு ரஜினி 35 நாள்கள் தேதி கொடுத்திருப்பதாகவும் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு காட்சிகள் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. செப்டம்பர் 15 தேதிக்கு மேல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்தப் படம் வெளியாகலாம் என்கிறனர் சினிமா வட்டாரத்தினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com